நவீன பிள்ளைகளும் வீதியோர பெற்றோர்களும்
பத்து மாதம் சுமந்து சுகப்பிரசவத்தை பெற வேண்டும் என்பதற்காகவும், தன் குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாகப் பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஒட்டுமொத்த அவளது இன்பங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு பிள்ளைகளுக்காக வாழ்பவள் தான் தாய்...
எவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தாலும், ஒருநாளும் தன் பிள்ளைகளையும் மனைவி மக்களையும் பசி பட்டினியில் விட்டுவிட கூடாது என்பதற்காகவும் இரவு பகலாய் வியர்வை சிந்தி தன் அத்தனை துன்பங்களையும் தன் மனதுக்குள்ளேயே அடக்கி வைப்பவர் தான் தந்தை...
இவ்விருவரும் தன் பிள்ளைகளுக்காகவே தன் அத்தனை இன்பங்களையும் தன் இதயத்தினுள்ளே பூட்டி வைப்பவர்கள்...
தன் பிள்ளையை வளர்ப்பதற்கு
தன் தன்மானத்தை கூட இழப்பதற்கு துணிவு கொண்டவர்கள் இவர்கள்.
என் உலகமே தன் பிள்ளைகள் தான் என்று வாழ்பவர்களே இவர்கள்...
இருந்தும் சில பிள்ளைகள் படித்து ஆளாகிய பிறகு, தன் பெற்றோர்களை ஒரு ஆளாகக் கூட மதிப்பதில்லை..
அவ்வளவு தலைக்கனம் அவர்களுக்கு...
மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு அதிகரிக்க அதிகரிக்க, பெற்றோர்களின் மதிப்பு மற்றும் மரியாதை குறைவடைந்து கொண்டேசெல்கிறது...
சிறுவயதில் தன் இன்பத்தை விட பிள்ளைகளின் இன்பமும் அவர்களின் கனவும் தான் முக்கியம் என்று வாழ்ந்தவர்கள் பெற்றோர்கள். ஆனால் அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் தன் இன்பங்ளுக்காகவும் பெற்றோரைக் கூட புறக்கணிக்க துணிவு கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் மிகப் பெரிய அவலம்.
தான் தன் வாழ்வின் இலக்கை அடைந்தவுடன் பெற்றோரை வீட்டை விட்டு துரத்தி அடிக்கும் நிலைக்கு மாற்றப்பட்டு விட்டனர் இன்றைய நவீன பிள்ளைகள் .
சிறு வயதில் எவ்வளவு நோய் வந்தாலும் தன் பிள்ளையை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிள்ளை எனக்கு வேண்டாம் என்று தூக்கி போட்ட எந்த ஒரு தாயும் இவ்வுலகத்தின் கிடையவே கிடையாது (விதிவிலக்கு விதியாகாது)
ஆனால் இந்தப் பிள்ளைகளுக்கு இரக்கமும் பாசமும் இரத்த உணர்வும் எங்கிருந்து இல்லாமல் போனதோ தெரியவில்லை.
தற்னை பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர்களை வீதியோரத்தில் விட்டுவிடுவதற்கு இவர்களுக்கு எங்கிருந்து மனம் வந்ததோ தெரியவில்லை...
கல்நெஞ்சம் பிள்ளைகள் அவர்கள்...
சிறுவயதில் தன் குழந்தையை ஈ எரும்பு தீண்டாமல் பாதுகாத்தவர்கள் பெற்றோர்கள் . ஆனால் இன்று தன் பெற்றோர்களை எரும்பு என்ன அதை விட பெரிய உயிரினங்களும் தீண்டுவதற்கு அனுமதிக்கும் பிள்ளைகள் இவ்வுலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்...
இதுதான் நவீனமா சமூக மயமாக்கப்பட்ட உலகமா???
தன்னுடன் இருக்கும் போது ஒருவரின் அருமை புரிவதில்லை ஆனால் அவர்கள் இவ்வுலகத்தில் இல்லை எனும் போதுதான் உள்ளம் உடைந்து விடும் .
ஆனால் இன்று தன் பெற்றோர்களை வீதியோரத்தில் விட்டுவிடுவதற்கு எங்கிருந்துதான் மனம் வந்ததோ என்னவோ...!
வீதியோரத்தில் கைவிடப்பட்ட பெற்றோர்களின் ஆதங்கத்தை ஆயிரம் மொழிகளால் விவரித்தாலும் அவர்களின் துன்பத்துக்கு ஈடாகாது....
கைவிடப்பட்ட பெற்றோர்கள் கடையின் வாசல்களிலும் வீதியோரங்களிலும் அமர்ந்திருக்கும் அந்த நிலையை பார்க்கும் போது உள்ளத்தில் வரும் கவலைக்கு எவ்வளவோ ஆறுதல் கூறினாலும் ஈடாகாது.
செல்வம் நிறைந்த சில முதலாளிகளும் அந்தப் பெற்றோர்களிடம் நடந்து கொள்ளும் முறையை மிகவும் கீழ்த்தரமானது. செல்வம் இருக்கும் ஆணவமோ என்னவோ......
என்னுடைய கடைக்கு அருகில் அமர வேண்டாம் என்று எத்தனை தடவை கூறினாலும் உங்களுக்கு அது புரியாதா என்று தரம் குறைவான வார்த்தைகள் மூலம் நாவினால் பேசி கொண்டுதான் இருக்கிறார்கள் தினமும் அவர்களிடம்
செல்வம் நிறைந்த முதலாளிகளே..! உங்களுக்கு ஒன்று கூறுகிறேன் அவர்கள் அவ்வாறு உம்முடைய கடை வாசலில் அமர காரணம் பெற்ற பிள்ளைகளும் அவர்களிடம் இல்லை அவர்கள் படுத்து உறங்குவதற்கு ஒரு இருப்பிடமும் இல்லை என்பதற்காக தான் . அவை அனைத்தும் அவர்களிடம் இருந்தால் உம்முடைய கடை வாசலில் அவர்கள் அமர்வதற்கு எந்த தேவையும் இல்லை. உம்முடைய நெஞ்சத்திலே சிறிதேனும் ஈரம் இருந்தால் அந்த பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு சென்று விடுங்கள் இந்த சிறிய உதவியேணும் அந்த பெற்றோர்களுக்கு செய்துவிடுங்கள்.
நவீன பிள்ளைகளே..!
எவ்வளவு அறிவு இருந்தாலும் போதாது உம்முடைய பெற்றோர்கள் உம்முடன் இல்லாதவிடத்து
நீ சிறுவயதில் உம்முடைய பெற்றோர்களுக்கு கொடுத்த துன்பத்துக்கு அவர்கள் உன்னை தூக்கி எறிந்து சென்றிருந்தாள் இன்று இந்த நிலைமையில் நீ இருந்திருக்க மாட்டாய்....
உன்னுடைய பெற்றோர்கள் உனக்குக் கிடைத்த பெரும் அருட்கொடை தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்று கூறினார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். தந்தையின் திருப்தியில் தான் அல்லாஹ்வின் திருப்தி இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.. அல்லாஹ் நீதியாளன். அவன் யாவற்றையும் பார்க்கக் கூடியவன். இவ்வுலகத்தில் நடக்கும் அத்தனை விடயங்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான் இனிமேலாவது நம் பெற்றோர்களுக்கு கண்ணியம் கொடுத்து அவர்களை எமது கண்களாக வாழ்வு முழுவதும் பாதுகாப்போம்....
ஆக்கம் :
ஷகீனா ஷாகிர்
ஹானி
கம்பளை மரியாவத்த.

Superb
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha Allah good message
ReplyDelete