என் உள்ளத்தில் இருந்து உனக்காய் சில வரிகள்...


சேகரித்து கொள். சொத்து சுகங்களை அல்ல. மாறாக நல்லமல்களை சேகரித்து கொள். இறுதி வரை உன்னோடு வருவது நல்லமல்கள் மட்டுமே.


மற்றவர்களுடன்  பொறாமை கொள்ளாதே. உன்னால் முடியும் என்பதை சாதித்து காட்டு. 


பேராசை கொள்ளாதே. இறைவன் உனக்கு அருளி இருக்கும்  அருட் கொடைகளை கொண்டு நிம்மதி அடைந்து கொள். 


தோல்விகளையும், கவலைகளையும் கண்டு துவளாதே. நிச்சயமாக இறைவன் அவைகளை மாற்றி தர கூடியவன்.


புறப்படு. உலக ஆசைகளின் பின்னால் அல்ல. நாளை மறுமைக்காக புறப்படு. 


பிரார்த்தனை செய். நாம் கேட்பதை எதிர் பார்த்து தர கூடியவன் தான் அவன். 


போராடு. உன்னிடத்தில் நல்ல ஒழுக்க விழுமியங்களை  கொண்டு வர போராடு. 


இன்னவள்,

ஸீனத் ஸமா இக்பால்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்