ஆன்மாவிற்கான தேடல்


 

நான் எழுதும் பேனை 

என்னை பார்த்து கேட்கிறது

 உன்னை உருவகிக்க என்னை 

ஏன் வதைக்கிறாய் என்று ..


பதிலே சொல்லவில்லை 

அவ்வளவு அவசரம் எனக்கு ஏனென்று எனக்கே தெரியவில்லை


 ஓடிக்கொண்டே இருக்கிறேன் 

இம் மாய உலகின் பின்னால்

ஏதோ ஒன்றை இலக்காய் வைத்து

 என் கால் போகும் பாதையில்


 எதையோ அடைய துடிக்கும் ஆவல்

 என்னை ஆவேசப்படுத்துகின்றது

 ஒரு கணம் தூரத்தில் ஏதோ சப்தம் "என்னையும் திரும்பிப் பார்" தொய்ந்து மறைகிறது ...


திடுக்கிட்டு நிமிர்கிறேன் 

யாரையும் காணவில்லை

 பின் தான் உணர்ந்தேன் 

அழைத்தது என் ஆன்மா என்று..


 நெஞ்சின் ஓரம் நெருடலாய் 

ஏதோ வலித்தது சில கணங்கள் நிசப்தமாய் நீண்டு மறைந்தது


 ஈமானிய பசிக்கு இறை தேடும் 

என் பயணம் இறுதி மூச்சு வரை இலக்காய் தொடரும் என்ற உறுதியுடன் வாழ்க்கை பாதையின்

 எட்டுக்களை இறை உதவியுடன்

 எடுத்து வைக்கிறேன்


 இம்மாய உலகின் மாயைகளை 

விட்டு விட்டு ஆன்மாவின் தேடலை அறிந்தவளாய்....


 - ILMA SIRAJ

Comments

  1. ஆன்மாவிற்கான தேடல்...👌

    ReplyDelete
  2. 👍 👍 👍 👏

    ReplyDelete
  3. Masha allah great have appreciated🥰✌️❤️

    ReplyDelete
  4. Mashallah highly appreciated

    ReplyDelete
  5. Super dr maasha Allah

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்