இயற்கை ஒரு அருட்கொடை





இயற்கை என்றால் மனிதனால் உருவாக்கப்படாதது. அல்லாஹ் மனிதர்களுக்கு ஓர் அருட்கொடையாக  கொடுத்து காடு, கல், பிராணிகள், வளி, நீர் ஏன் நாம் நின்றுக் கொண்டிருக்கும் இந்த மண் கூட இயற்கை தான்.




         இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றின் நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களை சரியான விகிதாச்சாரத்தில் அல்லாஹ் அமைத்திருக்கின்றான். அது போன்று தான் நமது உடல் சீராக இயங்குவதற்கு இவ்வளவு கொழுப்பு சத்து இருக்க வேண்டும்: இவ்வளவு இனிப்புச்சத்து இருக்க வேண்டும் என எல்லாமே ஒரு சரியான கணக்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.




அது  போல தான் அவ் விகிதாசாரத்தை தாண்டினால் உடல் கடுமையான  நோய்க்கு ஆளாகின்றது. இதை எல்லோரும் இயற்கை வகுத்த விதி என்கிறார்கள். இயற்கையே அல்லாஹ்வின் படைப்பாக இருக்கும் போது இது எப்படி, அதனால் தான்  இஸ்லாத்தின் அடிப்படையில் இறைவன் வகுத்த விதி என்கிறோம்.




 கோடை  காலத்தில் வெயில் மழை காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம் , மழை பெய்ததும் பூமியில் பச்சைப்பசேலென்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப்பெருக்கம்,வீசுகின்ற இந்த காற்று போன்ற இந்த அமைப்புகள் இயற்கை என்று நாம் கூறுகின்றோம்.




    மனிதன் இவ்வுலகில் வாழ அவனது சக்திக்கு அப்பாற்பட்ட பல அற்புதங்களை இயற்கை   நிகழ்த்தி வருகின்றது , ஒரு நாட்டுக்கு அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் அளிப்பது இயற்கை. இயற்கையை நாம் தவறாக பயன்படுத்துவதால்    தான் இவ்வளவு பிரச்சினையும் ஒரு நாட்டுக்கு வருகிறது.    


                  


                                  உதாரணத்திற்கு பெரிய நகரங்களிலுள்ள தொழிற்சாலைகள், அவற்றின் கழிவு நீர் ஆறுகளில் கலப்பதால், பிராண வாயு குறைந்து விடுகிறது, அதனால் நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிடுகின்றன. நகரவிரிவாக்கத்தால், நகரத்தையொட்டிய கிராமங்களில் பெருமளவான மரங்கள் வெட்டப்படுவதால் மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் மற்றும் நிழலுக்கு ஒதுங்கும் விலங்குகள் வாழ இடமின்றி அழிந்து வருகின்றன.




நமது இறைவன் இவ் அருட்கொடையை எவ்வாறு எம்மிடம் அளித்தானோ, அதே போலவே நாம் அதனை பயன்படுத்தி நம் எதிர்கால சமுகத்திற்கு ஒப்படைத்து விட்டு போக வேண்டும். இதனை விரிவாக சொன்னால் நாம் இதனை பாதுகாக்க வேண்டும் என்பதாகும். ஒரு கட்டிடம் கட்ட சில மரங்களை வெட்டினால் , அதே போல வேறு இடத்தில் இன்னும் மரங்களை நடுவதை நாம் மறக்க கூடாது. இதே போல் நீர் வளம் என்பவற்றையும் சிக்கனமாக பாவிக்க பார்க்க வேண்டும்.


       சூரா முல்க்கின் ஆரம்பத்தில் அல்லாஹ் கூறுகிறான் ( அவன் வானத்தையும் பூமியையும் அழிக்கவும் ஆக்கவும் ஆற்றலுடையவன் )

 இதில் அல்லாஹ் இயற்கையை நமக்கு அவனே அளித்துள்ளான் என்பது தெளிவாகிறது.அதே போல் தான் சூரா அர்ரஹ்மானில் அல்லாஹ் நமக்கு அளித்துள்ள இயற்கை அருட்கொடைகளை பற்றி விரிவாக கூறுகின்றான். இதில் நமக்கு  இன்னும் இயற்கையை பற்றி தெளிவாகின்றது. 


        ஆகவே, அல்லாஹ் எமக்கு அளித்துள்ள  இந்த இயற்கை வளத்தை தவறாக பயன்படுத்தாமல் வாழ்ந்து அவனது திருப்தியை பெறுவோமாக! ஆமின்..


SUHAIL SIRAJ
GRADE 09
(TRINTY COLLEGE KANDY)




Comments

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்