உணர்வுகளிலிருந்து உறவுக்கு ஒரு மடல்
உன்னதமான உறவில்
உண்மையை தேடும்
உனக்கான மடல்
உள்ளத்து உணர்வுகளிலிருந்து
சகோதரியே...
தோழமையாய் உன்னிடம்
தோலில் சாய்ந்து
சினேகமாய் சில
வார்த்தைகள் ..
பதின்ம வயதில்
பருவ மங்கையாய்
பல மாற்றங்களுடன்
பவனி வரும் என் சகோதரியே....
முன்னெப்போதும் உன்னில் முளைத்த எண்ணங்கள்
வேறு விதமாய் இப்போது
உனக்குள் உரமாய்
துளிர் விடுவதை
உணர்கிறேன்
மட்டுமின்றி
உலக மாய மோகத்தில்
உதிர்ந்து விழும் ஒரு பூவாய் உன்னை பார்க்க என்றும்
உன்னை நேசித்த
இவ்உள்ளம்
இடம் தரவில்லை
சகோதரியே .....
ஆடைகளை அளந்து
அணியும் காலம்
அதி சீக்கிரம் வரலாம் அடிபணியாதவள் அநாகரீகவாதியாக
தெரியலாம்
அதிலும் உன் உள்ளம்
உயர்வையே தேர்ந்தெடுக்கட்டும் சகோதரியே ...
எதிர் வார்த்தை என்றும்
பேசாத என் உறவே
இப்போது சில நேரம்
இயல்பாய் உன் நாவு
வசமிலந்து விடுவதை
உணர்கிறேன்
சகோதரியே...
உலகமே தடுத்தாலும்
உன் இஷ்டம் போல்
வாழ உதிரம் கொதிக்கும்
பருவமிது ..
நடப்புகள் சரியாக
நட்புகள் சீராக வேண்டும்
நட்புதான் உனக்கு
நாளைய உலகம் இல்லை
நல்ல உறவுகளால் - என்றும்
உனக்கு நஷ்டம் வருவதில்லை உபதேசம் செய்தால்
உன்னுள்ளம் ஏற்பதில்லை கேட்கத்தான் நினைத்தாலும்
உன் மனம் இடம் தருவதில்லை ஏனென்று அறிவேன் நான்
உன் பருவம் அப்படி
சகோதரியே...
கலாசாரம் மாறலாம்
ஆனால்
கதாநாயகியே நீ மாறலாகாது இஸ்லாத்தை வாழவைக்கும் இலட்சியப் பாதையில்
இம்மியும் பயமின்றி
இங்கிதமாய் காலெடுத்து வை நிச்சயமாய் ஈருலகிலும்
வெற்றி உனக்கு தான்
சகோதரியே...
அறிவுரையை அன்புரையாய் உரைத்து
மடல் அதற்கு
முற்றுப்புள்ளி இடுகிறேன் வாழ்த்துக்கள் பல கோடி
என் அன்பு
சகோதரியே....
By - ILMA SIRAJ

Masha allah
ReplyDeleteMasha Allah 👏👏
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha allah. 👏 👏
ReplyDeleteWay of addressing is fabulous masha allah May Allah bless you 😍
ReplyDeleteMasha allah
ReplyDeleteMaasha Allah
ReplyDeleteMashaAllah super 👍👌
ReplyDeleteMasha allah 🥰😍🥳 congrats
ReplyDeleteMasha Allah 👍👍
ReplyDelete