இறைவனை நெருங்குதல்...
இன்று சிலர் எதற்காக நாம் படைக்கப்பட்டோம் என்பதை மறந்தும் மறுத்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ் உலகத்தில் மனிதர்களாக நாம் படைக்கப்பட்டதன் நோக்கம், மனித சமூகமான நாம் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு அவனது போதனைகளை பின்பற்றி நடப்போமா? அல்லது படைப்பாளன் அவனை புறக்கணித்து எம் வாழ்வை முறையற்றதாய் வாழ்வோமா? என்பதை சோதிப்பதற்காகவே அன்றி வேறில்லை.
என்வே தான் சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ் அருள்மறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.
(அல் குர்ஆன் 51:56)
அல்லாஹ்வின் எமக்கு புறிந்த நிகரில்லா அருட்கொடை, இஸ்லாம் என்ற நேரான பாதையை தீனாக நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
அலஹம்துலில்லாஹ்...
இருந்தும் சிலர், படைத்த இறைவனை நின்று வணங்க கூட நேரம் இல்லை என்று கூறி போலியான இவ் உலக இன்பங்களில் மூழ்கி கிடக்கிறார்கள்.
ஈமானிய மனிதனே...! தீடிர் என்று மரணம் உன்னை வந்தடைந்தால் உன்னை படைத்த இறைவனிடம் நீ கூறும் பதில் என்னவாக இருக்கும்...?
அயல் நாட்டு ஜனாதிபதியை சந்திக்க நமக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது என்றால், ஆவலுடன் நேரம் வரும் வரை எதிர் பார்த்து, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே சென்று விடுவோம்.
ஆனால் அந்த ஜனாதிபதியை கூட படைத்த இறைவன் எம்மை ஜந்து முறை அவனை நின்று வணங்க அழைக்கிறான். ஏன் அந்த நேரத்தை மாத்திரம் மறந்து விடுகிறோம்.
ஈமானிய மனிதர்களே...!
இவ் உலகம் மறுமை நேக்கிய எம் நெடுந்தூர பயணத்தில் ஒரு தரிப்பிடம் அன்றி வேறில்லை. இவ் உலகம் நிரந்தரம் இல்லை.
படைத்த இறைவனை நின்று வணங்க நேரம் ஒதுக்கலாம் ...
எம்மை படைத்த இறைவனின் திருப்தியை பெற முயற்சி செய்யலாம்...
இன்னும்
எம் முழு வாழ்வையும் இபாதத் ஆக்க ஒரு அடி முன்னாள் எடுத்து வைக்கலாம்...
இன்ஷாஅல்லாஹ்.
நலவுகளின் பால் அல்லாஹ் எம்மை ஒன்றிணைக்கட்டும்...
#ஷகீனா ஷாகிர்
#ஹானி

👌👌
ReplyDeleteGreat
ReplyDeleteMashallah jzkllh madam😊
ReplyDeleteMashallah well said♥️👍
ReplyDelete