இறுதி வேதம் அல்குர்ஆன்
அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதங்கள் நான்கு என்பதை நாம் அறிவோம். அதல் அல்குர்ஆன் இறுதியாக முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதமாகும். நபி (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் (கி.பி.610 ஆம் ஆண்டளவில்) மக்காவிலுள்ள ஹிராக் குகையில் அவர் தனித்திருந்த வேளையில் “லைலதுல் கத்ர்” என்னும் இரவில் முதல் வஹி இறக்கப்பட்டது.
வஹி கொண்டு வரும் மலக்கான ஜிப்ரீல் (அலை) அவர்கள். அன்னாரிடம் வந்து “இக்ர (ஓதுவீராக)” என்றார்கள். அதற்கு அவர் “ எனக்கு ஓதத் தெரியாது” எனக் கூறினார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை இறுகக் கட்டித்தழுவினார்கள். பின்னர் விடுவித்து “இக்ர” என்று மீண்டும் கூறினார். அப்போதும் எனக்கு ஓதத் தெரியாது என்றே என்றே பதிலளித்தார்கள். ஜிப்ரீல் (அலை) மீண்டும் இறுகத்த தழுவி “இக்ர” என்று கூறி தான் ஓதுவதைத் தொடர்நது ஓதுமாறு நபியவர்களுக்கு ஸூரா அல் அலக்கின் முதல் ஐந்து ஆயத்துகளையும் ஓதிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதனை ஓதிக்காட்டினார்கள்.
இது நபி (ஸல்) அவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. அதனால் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டன. வீட்டை நோக்கி விரைந்தார்கள். ”என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்!” என்று கூறினார்கள். மனைவி கதீஜா (ரழி) அவர்கள் அவரைப் போர்த்தி தேற்றினார்கள். பின்னர் நடந்ததைக் கேட்டு தைரியம் ஊட்டி முன்னைய வேதங்களைக் கற்றறிந்த தமது உறவினரான “வரகா பின் நவ்பல்” இடம் அழைத்துச் சென்றார்கள். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவரிடம் வந்தவர் ஜிப்ரீல் (அலை) என்ற மலக்கு என்றும் வரகா தெளிவு படுத்தினார்.
அதைத் தொடர்ந்து சந்தர்ப்ப சூழ்நிலைக்கும், தேவைக்கும் ஏற்ப அல்குர்ஆன் ஆயத்துக்கள் அருளப்பட்டன. ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்குர்ஆன் ஆயத்துக்களை அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அதை மனனம் செய்து கொண்டார்கள். அத்துடன் எழுத்தறிவுள்ள தன் தோழர்களிடம் அவற்றை எழுதி வைக்குமாறும் பணித்தார்கள். அவ்வாறு வஹியை எழுதியோர் “குத்தாபுல் வஹி” என அழைக்கப்பட்டனர். அன்று மக்காவில் எழுத வாசிக்ககத் தெரிந்தவர்கள் குறைவாகவே இருந்தார்கள். அது போன்று எழுதுவதற்கான சாதனங்களும் குறைவாகவே காணப்பட்டன. எனவே அவர்கள் தோள், தடித்த எலும்பு, வெண்மையான கற்கள் போன்றவற்றில் எழுதிப் கொண்டார்கள்.
அல்லாஹ் மனிதர்களுக்கு வழிகாட்ட அருளியவையே வேதங்கள் ஆகும். இவ்வேதங்களை ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்வதன் ஊடாகவே அவனது ஈமான் பூரணமாக்கப்படுகிறது. வேதங்கள், சுஹுபுகள் பற்றி நம்பிக்கை கொள்வதே முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அல்லாஹ் அருளிய வேதங்களாக அல்குர்ஆனில் நான்கு வேதங்கள் குறிப்பிட்ப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கால சூழ்நலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு நபிமார்களுக்கு அருளப்பட்டன. ஆனால் அல்குர்ஆன் ஆனது மனிதனுக்கு நேர்வழி காட்டும் அருள்மறை என்ற வகையில் சகல அடிப்படை வழிகாட்டல்களையும் அது உள்ளடக்கியுள்ளது.
அல்குர்ஆனின் உள்ளடக்கத்தை 5 முக்கிய தலைப்புகளாக தொகுக்கலாம். அவை மறைவான விடயம், வணக்க வழிபாடுகள், வாழ்க்கைச் சட்டம், ஒழுக்க வி்ழுமியம், படிப்பினை தரும் வரலாறுகள் என்பனவாகும. அல்குர்ஆன் 114 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவை ஸூராக்கள் எனப்படுகின்றன. அவ்வாறே அதில் 6666 வசனங்கள் காணப்படுகின்றன. அவை ஆயத்துக்கள் எனப்படுகின்றன. மேலும் அல்குர்ஆன் 30 ஜுஸ்உக்களாகவும், 07 மன்ஸில்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
அல்குர்ஆன் இறுதி வேதம் என்பதற்கான நியாயயங்களாக அல்லாஹ்வின் அருள் பூர்த்தியாக்கப்பட்டது என்ற இறை செய்தி “இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் பூர்த்தியாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்கள் மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.” (அல்குர்ஆன் 5-3) எனும் வசனத்தின் மூலம் அறிவிக்கப்பட்டதை கருதலாம். இவ்வசனம் அல்லாஹ்வின் வழிகாட்டல் பரிபூரணமாகிவிட்டது என்பதையும் இதன் பிறகு நேரடி வழிகாட்டல் வர மாட்டாது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. அல்குர்ஆன் இறுதி வேதமாக அறிவிக்கப்பட்டமை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி ஆவார் என்பதையும், அவர்களுக்குப்பின் இன்னொரு நபி வர மாட்டார் என்பதையும் நிரூபிக்கும் ஆதாரமாகும்.
முன்னைய வேதங்களில் எந்த ஒன்றும் பெற்றிராத பல தனித்துவமான சிறப்புக்களை அல்குர்ஆன் கொண்டுள்ளமையும் இது இறுதி வேதம் என்பதற்கான ஆதாரமாகும். அல்குர்ஆனுக்குப் பின் இன்னொரு வேதம் வருவதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. நபியமார்கள் வருவதும் வேதங்கள் வழங்கப்படுவதும் வரலாற்றில் அதிசயமாகவே பார்க்கப்பட்டுள்ளன. இவை எழுத்து வடிவிலோ வாய்வழிச் செய்தியாகவோ பாதுகாக்ககப்பட்டும் வந்துள்ளன. அல்குர்ஆனுக்குப் பின்னர் இன்னொரு வேதம் அருளப்பட்டதற்கான அத்தகைய எந்த ஒரு தகவளும் அறியக்கிடைக்காமை அல்குர்ஆன் இறுதி வேதம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து படிப்படியாக அருளப்பட்டு வந்த கலாமாகும். அதில் எவ்வித முன்பின் முரன்பாடுகளோ பொருத்தமின்மைகளோ காணப்படுவதில்லை. அழகிய ஓசை நயத்துடன், பாமரர்களும் புரிந்து கொள்ளக்கூடிய மொழி நடையில் அருளப்பட்டுள்ள அல்குர்ஆன் உலகத்துக்காக இறக்கப்பட்ட பொது மறையாகும். அது நடைமுறை சாத்தியமானது. இறுதி வேதமான அல்குர்ஆனை விசுவாசிப்பதும் அதனைப் பின்பற்றி வாழ்வதும் எமது கடமையாகும்.
“நிச்சயமாக நாம் தான்( நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.” (அல்குர்ஆன் 15-9)
“இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல் உபதேசமின்றி வேறு இல்லை” (அல்குர்ஆன் 58-27)
“நபியே ஒவ்வொரு விடயத்தையும் தெளிவாக விவரிக்கக் கூடிய இவ்வேதத்தை நாம் தான் உங்களுக்கு இறக்கி வைத்தோம்.” (அல்குர்ஆன் 16-89)
அல்குர்ஆன் குறிப்பிடும் பல விடயங்கள் இன்றைய நவீன யுகத்தில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. முன்னைய வேதங்கள் அருளப்பட்ட மொழிகள் இன்று அரிதாகிவிட்டன. குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழி அதன் தூய வடிவில் அதிகமான மக்களால் இன்றும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது. எனவே அல்குர்ஆனே இறுதி வேதமாகும் என்பதற்கு இவைகளே சான்றுகளாகும்.
إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَـٰفِظُونَ
சல்வா மன்ஸூர்
தரம் 09
கம்பளை ஸாஹிராக் கல்லூரி

👏👌
ReplyDelete