பெண்ணே உன்னால்...
பெண்ணாய் பிறந்தால் சுமை என்று
பேதமையுடன் சிந்திக்கும் சமூகம்
சுவனம் கிடைக்கும் வழிகள் தேடி
சுபீட்சம் அடைய துடிக்கும் மனிதன்
தாயாய் நின்று தன் பாதமடியில்
சுவனம் தாங்கும் மங்கை அவள்...
தாரமாய் நின்று கைகோர்த்தவரை
தார்மீகமாய் தன்னோடு
சுவன பாதை காட்டும்
சுப சோபன மங்கை அவள் ...
மாதரசியாய் பிறந்து
மாண்புடனே பெற்றோரை
சுவனம் போக வழி காட்டும்
சுப மகளாய் அவள்...
தாயாய் தாரமாய் மகளாய்
எப்போதும் பெண்ணே
உன்னால் சுவனபேறு
பெற்ற உலகமிது....
- ILMA SIRAJ

Mashallah ..well said.👍♥️
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha Allah❤️
ReplyDeleteGreat ✌️
ReplyDeleteMasha allah good job ♥️
ReplyDeleteMaasha Allah
ReplyDelete