மௌனத்தின் மொழிகள்

வார்த்தைகள் இன்றிய 

உவகையின் போது 

மௌனம் சந்தோஷத்தின் மொழி..


உணர்வுகள் ஊமையாகி உள்ளம் பாரமாகும் போது 

மௌனம் கவலையின் மொழி..


அனைத்தையும் அறிந்து பதிலின்றி நிற்கும் போது 

மௌனம் சம்மதத்தின் மொழி..


ஆசைகள் அனைத்தும் நிராசையாகிவிடும் போது

மௌனம் வெறுப்பின் மொழி..


எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றங்களாகும் போது 

மௌனம் விரக்தியின் மொழி..


மனம் தடுமாறி நரம்புகள் 

புடைக்கும் போது 

மௌனம் கோபத்தின் மொழி..


உள்ளம் வெதும்பி நிர்க்கதியாய் நிற்கும் போது

மௌனம் மறுப்பின் மொழி..


மொத்தத்தில் மௌனம் உணர்வுகளின் மொழி..


மொழிபெயர்ப்பின்றி மௌனங்களை புரிந்து கொள்ளும் உறவுகள் கிடைத்தால் 

வாழ்க்கை வசந்தம் ஆகிவிடும்..


- ILMA SIRAJ

Comments

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்