சூழலைப் பாதுகாப்போம்


சூழல் என்பது எம்மைச் சூழவுள்ள வெளியாகும். அந்த சூழலில் வாழ்ந்தால் மட்டும் போதாது. அதற்குச் செலுத்த வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்றுவதும் அவசியமாகும், எம் முன்னோர்கள்  முற்காலத்தில் சூழலை எவ்வளவு அழகாக வைத்திருந்தனர்! அதைப்போன்றே நாமும் சூழலைப் பேணி வாழப் பழகுவோம்.

எமது சூழலை மாசடையாது பாதுகாக்க வேண்டும். எனெனில் சூழல் மாசடைவதால் பிற்காலத்தில் குணப்படுத்த முடியாத நோய்கள் பல ஏற்படும். நாம் எதிரநோக்கும் பாரிய சூழல் பிரச்சினை உக்கலடையாத குப்பைகளாகும். பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற அத்தகைய மாசுப்பொருட்களை சூழலில் விடுவிப்பதை தவிர்ப்போம். பொலித்தீன், பிளாஸ்டிக் பொருள்களை வாங்குவதைக் குறைப்போம். அதற்கு பதிலாக இயற்கையான மாற்றீடுகளை பயன்படுத்துவோம். 

பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை  சூழலில் விடுவித்தல், தொழிற்சாலை கழிவுகளை நீருடன் கலத்தல், வீட்டுக் குப்பைகளை முறையற்ற ரீதியில் சூழலில் விடுவித்தல் போன்ற பல தீங்கான  செயற்பாடுகள் எமது சூழலில் இடம் பெருகின்றன. முதலில்  நாம் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்திருத்தல் வேண்டும். பின் மற்றவர்களிடமும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தாவரங்களை வளர்ப்போம். இதன் மூலம் ஆரோக்கியமான, சுத்தமான வளிமண்டளத்தை உருவாக்குவோம். ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலையும் ஆரோக்கியமான ஒரு சமூகத்தையும் கட்டியெழுப்புவோம்

M.R.F. Nazeera
Grade  - 06 
(Gampola Zahira College)


Comments

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்