இறைவனின் அற்புதச் சொல்லாடல் அல் குர்ஆன்

சமூக வலைத்தளங்களின் தாக்கம் தற்போது இளைஞர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ளது எனலாம். வாழ்க்கையை ஏன் வாழ்கிறோம்? நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? என்று அறியாமலேயே இளைஞர்கள் ஒரு ஜடமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான் இங்கு கோடிட்டுக் சுட்டிக் காட்டப்பட வேண்டிய வேடிக்கையான விடயம். 


கவர்ச்சிகரமான இவ்வுலக இன்பங்களில் மூழ்கி,படைத்த இறைவன் விதித்த வணக்கங்களைமறந்து விடுகின்றான். இறைவனது பேச்சு என வர்ணிக்கப்படும் அல் குர்ஆனை ஓதுவதற்கு கூட  நேரம் இல்லை என்று வாய்க் கூசாமல் கூறும் அளவு தன்னையும், தன்னை சூழ முழு வாழ்வையும் இருகிய ஓட்டத்துக்கு கொண்டு வந்துவிட்டான். ஆனால் சமூக வலைத்தளங்களை பாவிப்பதற்கு மாத்திரம் அவனுக்கு எங்கிருந்தோ என்னவோ நேரம் இறை அருளாக வந்து விடுகின்றதாம். இதற்கான பதில் வினவப்படுமிடத்து, "நேரமில்லை, வேலை அதிகம்" என்று காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 


ஒன்றை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள். நிரந்தரமில்லாத இவ்வுலகத்தை போன்றுதான் இவ்வுலகத்தில்  உள்ளவைகளும். அது உன் உயிர் தோழனின் நட்பாகக் கூட இருக்கட்டும். இன்னும் பொன்னான நேரங்களை வீணாகக் கழிக்கும் சமூக வலைத்தளங்களாகக் கூட இருக்கட்டும். நீ மரணித்து விட்டால் உன்னுடன்

தோழமைக் கொள்ள வரப் போவது இவை ஒன்றுமில்லை. 


மாற்றமாக நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட வேதம் அல்குர்ஆன் தான் நீ மரணித்தால் உன்னை காக்க உன்னுடன் வரும் என்பது நிதர்சன உண்மை . 


எனவே தான்‌ நபியவர்கள் பின்வருமாறு நவின்றார்கள்.


இரண்டே இரண்டு விடயங்கள் மாத்திரமே மறுமையில் சிபாரிசு செய்யும்

1 அல் குர்ஆன்

2 நோன்பு

-அஹ்மத், ஹாகிம்


அல்குர்ஆனை ஓதுவதின் பரக்கத்தினால் குழப்பங்களிலிருந்தும் விடுப்பட காரணமாகிறது..ஸகீனா எனும் அமைதியும் றஹ்மத்தும்  இறங்கி விடுகின்றது. 


இன்று பலர் மத்தியில் பேசப்படும் கருத்து யாதெனின் "உன் மொழி செம்மை படுத்தப் பட வேண்டுமா? நீ பல நூல்களை வாசி" என்று கூறுவர். ஆனால் அல்குர்ஆனின் அற்புதமான வார்த்தைகளை பாருங்கள். சுப்ஹானல்லாஹ்...


நாம் என்றுமே அறிந்திராத வார்த்தைகள்.. அவ்வளவு அழகு. 

காரணம் அது  அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சொல்லாடல்கள்...


அதனை நாம் ஓதுவோம் ...


இன்றிலிருந்து நாம் மாறுவோம் ... 


இன்ஷா அல்லாஹ்...


#ஷகீனா ஷாகிர்

#ஹானி

Comments

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்