பெண்ணே துணிந்தெழு
வையகம் வாழ்த்திட பெண்ணே நீயும்
வைதோர் வார்த்தைகள் பொய்யென கூறிட
கிஞ்சிற்றும் அஞ்ஞாமல் பெண்ணே நீயும்
கிளர்ந்தெழு அறிவால் புதுயுகம் படைத்திட.
சுற்றமெங்கும் சூழ்ந்துள்ள தடை விலக்கி
சுழன்று சூறாவளியென பாதங்கள் பதித்திடு
அச்சங்களை அகல செய்து நீ
அச்சாணியை பதித்திடு புதுயுகம் படைத்திட...
மாது என்று மாரடிக்க வைக்கும் மாசான இவ்வுலகில் மாற்றங்கள் படைத்திட
எதிர் காற்றாய் எகிறி நீ
எம்பி குதித்திடு புதுயுகம் படைத்திட
உனக்கான பாதையில் ஊற்றாய் தடைகள்
உதித்துக்கொண்டே உனை தடை செய்ய
காலணியாய் நினைத்து மிதித்து விடு
காற்றாய் மாறி புதுயுகம் படைத்திட
ILMA SIRAJ

Masha allah good job 💫👏🏻♥️🖤😜🤩congratulations
ReplyDeleteMaasha Allah great
ReplyDelete