ஈமானியப் பெண்ணே...!
ஹிஜாப்...
அது உன் அடையாளம்...
ஹிஜாப்...
அது உன் பாதுகாப்பு கேடயம்...
அல்லாஹ்
அருள்புரிந்த கொடைகளுள்
ஹிஜாப்...
அது ஆகப் பெரும் அருட் கொடை...
சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹிஜாப்...
அது ஓர் ஆயுதம்...
உன்னை பாதுகாத்து...
உன் பார்வையை தாழ்த்தி...
உன்னை விபச்சாரத்திலிருந்து தடுத்து...
உன்னை சாலிஹான ஈமானிய
பெண்ணாக மாற்றும் வல்லமை
கொண்டது ஹிஜாப்...
ஆனால்...
ஹிஜாப் இன்று ஸ்டைல் ஆக
ஹிஜாப் இன்று பேஷன் ஆக
இன்னும்
ஹிஜாப் இன்று மோடன் ஆக
ஹிஜாபின் தனித்துவத்தை இழந்து நிற்கிறது நவீனத்தில்.
இதுவே
மொடர்ன் பெண் சுதந்திரமாம்...
ஜாஹிலிய்யாக் காலத்தில்
காணப்பட்ட விடயங்கள்
ஏனோ .......
இப்பெண்களிடம் இன்னும் எஞ்சியிருக்கிறதே...
மாற்றம் விரும்பும் பெண்ணாய்
இறைவழி நடக்கும் அடியானாய்
இன்றில் இருந்து மாறுவோம் நாமே...
"நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள் தமது அலங்காரத்தில் (இயல்பாக) வெளியே தெரிபவற்றைத்தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும், தமது முக்காடுகளை(நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்து)க் கொள்ளட்டும்"
-அல்குர்ஆன்-
ஷகீனா ஷாகீர்
ஹானி

💯👍👍 Masha Allah
ReplyDelete