இம்மை - மறுமை
உலக வாழ்க்கை இம்மை,
மறு வாழ்க்கை மறுமை.
என்று கூறினால் வசனம் சுருங்குகின்றதே - தவிர
இரண்டையும் இலகுவாக வென்றிட முடியாது.
இம்மையில் இன்பத்தை அனுபவிக்கின்றாயே
மறுமையில் எதை அனுபவிக்கப் போகிறாய்
என்பதை இம்மையில் முடிவெடுத்து
மறுமை வாழ்வுக்காய் அஞ்சிக்கொள்!
நீ அல்லாவை வணங்கிப்பார்,
அவன் திருநாமத்தை ஓதிப்பார்.
உன் உள்ளத்திலும் உன்னிலும்
ஏற்படும் மாற்றத்தை மறு நொடியில் உண்ர்ந்து கொள்வாய்.
மனிதா! ஐநேரம் தொழுவதால் உனக்கு கிடைக்கும் திருப்தி
ஆயிரம் மதுபானங்களை அருந்துவதால் கிடைத்திடுமா?
பதினைந்து நிமிடம் திருக்குர்ஆனை பொருள் விளங்கி ஓதுவதால் தீரும் குழப்பம்
பதினைந்து வருடம் நீ இசை கேட்டும் தீர்ந்ததா?
எதை எதையோ சிந்தித்து உன் நேரத்தை வீணடிக்கிறாயே!
மறுமையில் என்ன நடக்கும் என ஒரு நிமிடம் சிந்தித்தால்,
வேறெதையும் சிந்தித்து நேரத்தை
வீணடிக்க வேண்டிய அவசியம் உனக்கேற்படாதே!
சிந்தி, நீ என்றோ ஒருநாள் நிச்சயம் மறைந்தே ஆகவேண்டும்.
அதை உன்னால் மறுக்க முடியுமா? - இல்லை
உன் மரணத்தை உன் பணத்தால், இசையால்,
போதையால், பிடிவாதத்தால் தள்ளி வைக்கத்தான் முடியுமா?
நீ அல்லாஹ்வுக்காகத் தான் செய்தாலும்
அதன் பலன் அல்லாஹ்வுக்கல்ல, உனக்குத்தான்.
இம்மையில் கிடைப்பதை விட பல மடங்கு சந்தோஷங்களை
உனக்குத் தர அவன் காத்திருக்கிறான்.
எல்லாவற்றையும் எமக்கு கொடுத்த அவவே
சிந்தனைத் திறனையும் கொடுத்தான்.
அவனுக்காக சில நிமிடம் சிந்திக்க கஞ்சத்தனம் வேண்டாமே!
நன்கு சிந்தித்து இம்மையிலும் வென்று மறுமையிலும் வெல்வோமாக
இவ்வுலகில் விதைத்த விதையெல்லாம் நீ மறு உலகத்தில்
விளைச்சலாகப் பெற்றுக் கொள்வாய்.
Nifla Ameen
Grade 09
Tamil Medium

Great job
ReplyDelete