இன்றைய சமூக வலைதலங்களும், சமூகமும்










இன்றைய உலகத்தில் தொழிநுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது. இதனை நாம் அனைவரும் அறிந்ததே! இருந்தும் நம்மில் பலர் அதனை ஒழுங்காக பயன்படுத்தி கொள்வதில்லை. மிகவும் முக்கியமாக நம் எதிர் கால சமுதாயம் அதனை ஒழுங்காக புரிந்து கொள்ளவில்லை. இப்போது பெரும்பாலும் அனைவர் கைகளிலும் இந்த கையடக்க தொலைபேசி உலாவுகிறது. அதில் நன்மைகள் இருந்தாலும் கூட

 இன்னும் ஒரு பக்கம் தீமைகளும் உண்டு உறவுகளே!!!!

 இன்றைய கால சிறுவர்களின் கைகளில் இந்த கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருகிறது. நிகழ் நிலை கல்வி, ஓதல்,வகுப்புகள் இப்படி எல்லாம் இப்போது இலகுவடைந்து விட்டது. பிள்ளைகளும் அதற்கே இசைவாக்கமடைந்து அவர்களின் மீதமுள்ள நேரத்திலும் இந்த கையடக்க தொலைபேசியிலே நேரத்தை செலவலிக்கின்றார்கள். வீட்டில் பொற்றோர் அழைத்தாலும் கூட பதிலலிக்க நேரம் இல்லை. ஏன் நம்மை படைத்த இறைவனை சுஜுத் செய்ய கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. இப்படியாக உள்ளது இன்று நம் சமுதாயத்தின் நிலை. இப்படியாக இருந்தால் எம் சமூகம் இறுதியில் கேள்வி குறி ஆகி விடும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.


அதே போல் எம்மில் எத்தனை பெற்றோர் சிறு குழந்தைகளை சமாளிக்க முடியாமல் அவர்களின் கைகளில் இந்த கையடக்க தொலைபேசியை கொடுத்து விட்டு அவர்களின் வேலைகளில் ஈடுபடுகின்றனர். குழந்தைகளும் அதற்கே இசைவாக்கமடைகின்றனர்.பின் அவர்களுக்கு தொலைபேசி இல்லாமல் நேரத்தை கடக்க இயலாமல் போகிறது. இன்னும் அவர்கள் தொலைபேசி க்கு அடிமைத்தனம் ஆகி விடும் போது அவர்களின் உடற்வலிமை குன்றல், கண் பார்வை இல்லாமல் போகுதல், தலைவி இப்படியாக பல நோய்கள் ஏற்படுகிறது.


இன்னும் இந்த கையடக்க தொலைபேசி பாவனை அதிகரிப்பின் மூலம் பொற்றோர் பிள்ளைகளின் உறவுகளும் கூட ஏனோ தானோ என்று இருக்கிறது. பிள்ளைகளின் தேவை, அவர்களின் மனநிலை இப்படி விடயங்களை கண்காணிக்க தவறிவிடுகிறோம். இன்னும் சில பெண் பிள்ளைகளுக்கு தவான பத்து இலக்கங்கலால் வரும் குறுஞ் செய்திகள் மூலம் அவர்களின் இளமை வயதையே தொலைத்து விடுகிறார்கள். பாலியல் துஷ்பிரயோகங்களும் இந்த கையடக்க தொலைபேசி பாவனையால் அதிகரித்து வருகிறது.

சமூகத்தின் மத்தியில் கையடக்க தொலைபேசி ஒரு போதை பொருளாக கூட மாறி வருகிறது என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்த கையடக்க தொலைபேசி இல்லாமல் சிறுவர்களால் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.


தயவு செய்து இந்த கையடக்க தொலைபேசி மூலம் உள்ள நன்மைகள் மட்டும் எடுத்து விட்டு தீமைகளில் இருந்து நம் எதிர் கால சந்ததிகளை பாதுகாத்து ஓர் உயரிய இடத்திற்கு நம் சமுதாயத்தை உருவாக்க கைகோர்போமாக... இன்ஷா அல்லாஹ் 


இன்னவள், 🖊️

ஸீனத் ஸமா இக்பால்

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்