துணிவு
நீ சவாலை எதிர்த்தால் சவால் பயப்படும்
ஆனால் சவால் உன்னை எதிர்த்தால் நீ எப்பொதும் பயப்படாதே!
முயற்சி உன்னை கைவிட்டாலும்
நீ முயற்சியை கைவிடாதே!
தோல்வியை நீ ஏற்றுக் கொண்டாலும்
அதை நீ வாழ்க்கையில் பழக்கமாக
மாற்றாதே!
தோல்வியை கண்டு அஞ்சாதே!
தோல்வி வெற்றியின் வழிகாட்டி.
வாழ்க்கையில் சோர்ந்து விடாதே
அப்படியானால் நீ உன்னைத்
தொலைத்துக் கொள்கிறாய்!
நேரத்தை வீணாக்காதே
அப்படியானால்
நீ உன் வாழ்க்கையின் நொடிகளை வீணடிக்கிறாய்!
சவாலை எதிர்க்க துணிந்து நில்!
முயற்சியை கைவிடாதே! தோல்வி
உன்னைக் கண்டு சிரிக்கும்!
வெற்றியை இலக்காக வை!
அதற்கு செயற்படு!
✎_M.A. Maryam (Grade : 06)
(Gampola Zahira College)

Masha allah
ReplyDeleteGreat job👌
ReplyDelete