பெற்றோரை பராமரிப்போம்

 


பெற்றோர் என்பது அல்லாஹ்வால் எமக்கு வழங்கப்பட்ட அருள்களில் ஒன்றாகும். நாம் பிறந்ததில் இருந்து எமக்கு உணவு ஊட்டி, குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, அன்பையும், அரவணைப்பையும் வழங்கி எவ்வளவு அழகாக பராமரிக்கிறார்கள். அதே போல் நாமும் அவர்களை பராமரிக்க வேண்டும். பெற்றோர்களை துன்புருத்தக் கூடாது. எப்படிப்பட்ட கவலைகள், பிரச்சினைகள் வந்தாலும் எங்களை எவ்வளவு அழகாக பராமரிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு கூறினார்கள், “பெற்றோரின் திருப்தி கிடைத்தால் மாத்திரமே அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கிறது.” ஒரு மனிதர் செய்கின்ற நற்காரியங்களில் பெற்றோரைப் பேணுவது சிறப்புமிக்கதாகும். அது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக்கொள்ள உதவுகின்றது என பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

“தனது பெற்றோரை திருப்திப்படுத்தியவன் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்தியவன் ஆவான். பெற்றோரின் அதிருப்திக்குள்ளானவன் அல்லாஹ்வின் அதிருப்தியை பெற்றவன் ஆவான்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெற்றோருக்கு நன்மை செய்வது அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தரும் என்பதையும் பின்வருமாறு கூறலாம்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான அமல் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது என்று கூறினார்கள். அதன் பின் என மீண்டும் கேட்கப்பட்டது. அதற்கு “பெற்றோருக்கு உபகாரம் செய்தல் என்றார்கள்.

இவ்வுலகில் ஒன்றும் அறியாத, எதற்கும் சக்தியற்ற நிலையில் பிறக்கின்ற குழந்தையைப் பேணிப் பாதுகாத்து, தேவையான உணவுகளையும், அறிவையும் புகட்டி பெற்றோர் வளர்த்தெடுக்கிறார்கள். இதற்கென மாபெரும் அர்ப்பணிப்புகளை செய்கின்ற பெற்றோருக்கு கடன் தீர்க்க இவ்வுலகில் யாராலும் முடியாது. அதற்கீடாகத்தான் பெற்றோருக்கு உபகாரம் செய்வதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இந்த வகையில் ஒருவர் பெற்றோருக்கு செய்ய வேண்டிய உபகாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவர்களுக்கு நன்றி செலுத்துதல், பெற்றோருக்காகப் பிரார்த்தித்தல். கனிவாகப் பேசுதல், அவர்களின் சொல் கேட்டு நடத்தல், பெற்றோரின் அனுமதி பெற்று காரியங்களில் ஈடுபடுதல், அன்பாகவுத் இரக்கமாகவும் நடந்து கொள்ளல், பெற்றோரின் நண்பர்களையும் உறவினர்களையும் மதித்தல். இவற்றை விட பெற்றோருக்கு நோவினை செய்வது பெரும் பாவம் என இஸ்லாம் எச்சரிக்கிறது. பெற்றொரைப் பராமரிப்பதை ஈமானுக்கு அடுத்த விடயமாகக் கருதும் இஸ்லாம், அவர்களை நிந்திப்பது, அவர்களுக்கு கட்டுப்படாதிருப்பது, அவர்களை தூற்றுவது என்பவற்றை ஷிர்க்கிற்கு அடுத்த பெரும் பாவமாகும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஏனைய பாவங்கள் செய்பவனை அல்லாஹ் மறுமை வரை விட்டு வைக்கின்றான். ஆனால், பெற்றோரைத் துன்புறுத்துபவனை அல்லாஹ் இவ்வுலகிலேயே துன்பத்திற்கு உள்ளாக்கின்றான்.

எனவே, எமது பெற்றோரைக் கண்ணியப்படுத்தி, அவர்களுக்கு உபகாரம் செய்வதுடன் தினம் அவர்களுக்காகப் பிரார்த்தித்து இம்மையிலும் மறுமையிலும் இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ள உறுதி கொள்வோமாக!


எம். ஆர். எப். ரிஸ்கா.

தரம் 09

Comments

  1. ஒரு நல்ல கட்டுரை

    ReplyDelete
  2. Mashallah !!! A good advice and article 😃 jzkllh for the big message.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்